சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

பழைய ரயில் பெட்டிகளை மறுசுழற்சி முறையில் உணவகமாக மாற்றி இந்திய ரயில்வே அசத்தியுள்ளது.மேற்கு வங்க மாநிலம் புதிய ஜல்பைகுரி ரயில் நிலையத்தில், பழைய ரயில் பெட்டியை புணரமைத்து ‘ரயில் கோச் ரெஸ்டாரண்ட்’ என்ற அட்டகாசமான உணவகத்தை வடகிழக்கு ரயில்வே நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

இந்த உணவகத்தில் குறைந்த விலையில் பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், சில்லி சிக்கன், மொமோஸ், தோசை, டீ போன்ற பல்வேறு தரப்பினரை கவரும் உணவுகள் விற்கப்படுகின்றது.

தொடர்ந்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் இதுபோன்ற உணவகத்தை உருவாக்கினால், ரயில் பிரியர்களுக்கு புதிய அனுபவமாக அமையும்.