சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு : தென்னக ரயில்வே அறிவிப்பு


நிரந்தரமாக பெட்டிகள் இணைப்பு

வண்டி எண் 22677 யஸ்வந்பூர் - கொச்சுவேலி வாராந்திர குளிர்சாதன ரெயில், சேலம் ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் இன்று (வியாழக்கிழமை) முதல் மூன்றடுக்கு படுக்கை வசதி, குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.

வண்டி எண் 22678 கொச்சுவேலி - யஸ்வந்பூர் வாராந்திர குளிர்சாதன ரெயில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மூன்றடுக்கு படுக்கை வசதி, குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது.

தற்காலிகமாக பெட்டிகள் இணைப்பு

வண்டி எண் 12257 யஸ்வந்பூர் - கொச்சுவேலி வாரம் மும்முறை 'ஏழைகள் ரதம்' குளிர்சாதன ரெயில், ஓசூர், தர்மபுரி, சேலம் ஈரோடு, கோவை வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் ஜூன் 26ம் தேதி முதல் டிசம்பர் 29ம் தேதி வரை மூன்றடுக்கு படுக்கை வசதி, குளிர்சாதன வசதி கொண்ட நான்கு பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.

வண்டி எண் 22678 கொச்சுவேலி - யஸ்வந்பூர் வாரம் மும்முறை 'ஏழைகள் ரதம்' குளிர்சாதன ரெயில், கோவை, ஈரோடு, சேலம் தர்மபுரி, ஓசூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் ஜூன் 27ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை மூன்றடுக்கு படுக்கை வசதி, குளிர்சாதன வசதி கொண்ட நான்கு பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.

இந்த தகவலை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.