சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

நாகப்பட்டினம் - கோவா ரயிலில் நிரந்தரமாக கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது : தென் மேற்கு ரயில்வே தகவல்நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், பெங்களூர் பனஸ்வாடி, தும்கூர், ஹூப்ளி வழியாக கோவாவிற்கு வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ஜூலை மாதம் முதல் படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படவிருக்கிறது. அதன் விவரம் பின்வருமாறு ;

கேஸ்டல் ராக், குலேம், மட்கோன் மற்றும் வாஸ்கோடகாமா ஆகிய நான்கு நிறுத்தங்களும் கோவா மாநிலத்தில் அமைந்துள்ளது.

வண்டி எண் 17315 வாஸ்கொடகாமா(கோவா) - நாகப்பட்டினம் வாராந்திர ரெயில், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் வருகிற ஜூலை 4-ந் தேதி முதல் படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது.

இதுபோல் வண்டி எண் 17316 நாகப்பட்டினம் - வாஸ்கொடகாமா(கோவா) வாராந்திர ரெயில், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி நிரந்தரமாக வருகிற ஜூலை 6-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.

மேற்கொண்ட தகவலை தென் மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.