சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

திண்டுக்கல் - மதுரை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க சோழவந்தான் வட்டார ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கைகொரோனோ பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் மீண்டும் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திண்டுக்கல் - மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என சோழவந்தான் வட்டார ரயில் பயணிகள் நல சங்கத்தினர் மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சோழவந்தான் வட்டார ரயில் பயணிகள் நல சங்கத்தினர் அளித்துள்ள மனுவில், சோழவந்தான்ரயில் நிலையத்தில் இருந்து மார் 800 பேர் மாதாந்திர பயணசீட்டு கொண்டு திண்டுக்கல் - மதுரை பயணிகள் ரயிலில் பயணித்ததாகவும். இந்த ரயிலை மீண்டும் இயக்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் திருநெல்வேலி செல்லும் நெல்லை அதிவேக வண்டி சோழவந்தான் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்வதால் மதுரை மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்ல சிரமப்படுவதாகவும், இந்த ரயிலை சோழவந்தான் ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல ஆவண செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளனர்.