சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

மதுரை - போடி அகல ரயில் பாதையை மின்மயமாக்க நிதி ஒதுக்கீடுமதுரை - போடி அகல ரயில் பாதையை மின்மயமாக்க ரூ.98.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

மதுரை - போடி இடையே 90.4 கி.மீ., மீட்டர்கேஜ் பாதையை அகலரயில் பாதையாக மாற்ற 2011ல் பணிகள் துவங்கின. போதிய நிதி ஒதுக்கீடு இன்றி திட்டம் இடையே வேகத்தில் நடந்தது. தற்போது மதுரை - தேனி வரை அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளது. தேனி - போடி இடையிலான அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது.

  • 2022 - 2023 மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் புதிய வழித்தடம், மின்மயமாக்கலுக்கு ரூ.3865 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை - போடி இடையிலான 90.4 கி.மீ., துார அகலரயில் பாதையை மின்மயமாக்க ரூ.98.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மின்மயாமாக்கும் பணிகள் 2023க்குள் முடித்து பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.