சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

கேரளாவில் இரட்டை ரயில் பாதை தொடர்பான பொறியியல் பணி : கேரளா வழியாக செல்லும் பல்வேறு ரயில் சேவைகளில் மே 28ம் தேதி வரை மாற்றம்

கேரளாவில் ஏட்டுமனூர் மற்றும் சிங்கவனம் இடையே உள்ள ரயில் பாதையை இரட்டை பாதையாக மாற்றியமைக்கும் பணி தொடர்பான பொறியியல் பணி காரணமாக 28 மே 2022 வரை பல்வேறு ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு :

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம் :


1. ரயில் எண். 12623 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் மெயில், மே 23ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

2. ரயில் எண். 12624 திருவனந்தபுரம் சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் மெயில், மே 24ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

3. ரயில் எண். 16526 பெங்களூரு - கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸ், மே 23ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

4. ரயில் எண். 16525 கன்னியாகுமரி - பெங்களூரு ஐலண்ட் எக்ஸ்பிரஸ், மே 24ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

5. ரயில் எண். 16649 மங்களூரு சென்ட்ரல் - நாகர்கோவில் சந்திப்பு பரசுராம் எக்ஸ்பிரஸ், மே 20ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

6. ரயில் எண். 16650 நாகர்கோவில் சந்திப்பு - மங்களூரு சென்ட்ரல் பரசுராம் எக்ஸ்பிரஸ், மே 21ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை  முழுமையாக ரத்து செய்யப்படும்.

7. ரயில் எண். 16791 திருநெல்வேலி சந்திப்பு - பாலக்காடு சந்திப்பு பாலருவி எக்ஸ்பிரஸ், மே 27ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும்.

8. ரயில் எண்16792 பாலக்காடு சந்திப்பு - திருநெல்வேலி சந்திப்பு பாலருவி எக்ஸ்பிரஸ், மே 28ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும்.

மேற்கொண்ட 8 ரயில்கள் உள்பட கேரளாவில் ஓடும் பல்வேறு ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

பகுதி தூரம் ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்.
 

1. ரயில் எண். 17230 செகந்திராபாத் சந்திப்பு - திருவனந்தபுரம் சென்ட்ரல் சபரி எக்ஸ்பிரஸ், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து மே 23, 24, 25, 26 மற்றும் மே 27ம் தேதி புறப்படும் சேவைகள் திருச்சூரில் நிறுத்தப்படும். இந்த ரயில் திருச்சூர் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 
2. ரயில் எண். 17229 திருவனந்தபுரம் சென்ட்ரல் - செகந்திராபாத் சந்திப்பு சபரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து மே 24, 25, 26, 27 மற்றும் 28ம் தேதிகளில் புறப்பட வேண்டிய சேவைகள் திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்கு பதிலாக திருச்சூரில் இருந்து புறப்படும். இந்த ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் திருச்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

எர்ணாகுளம் டவுன், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, கோட்டயம் தடத்திற்கு பதிலாக ஆலப்புழா வழியாக மாற்றுப்பாதையில் இயங்கும் ரயில்கள் :
 

1. மே 18, 21 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கோர்பாவில் இருந்து புறப்படும், ரயில் எண். 22647 கோர்பா - கொச்சுவேலி விரைவு ரயில் எர்ணாகுளம் டவுன் மற்றும் காயம்குளம் இடையே மாற்றுப்பாதையில் இயங்கும். ஆலப்புழா வழியாக செல்லும் இந்த ரயில் எர்ணாகுளம் சந்திப்பு, சேர்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா மற்றும் ஹரிபாட் ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

2. ரயில் எண். 17230 செகந்திராபாத் சந்திப்பு - திருவனந்தபுரம் சென்ட்ரல் சபரி எக்ஸ்பிரஸ், செக்கந்தராபாத் ரயில் நிலையத்தில் இருந்து மே 20ம் தேதி வரை புறப்படும் சேவைகள், எர்ணாகுளம் சந்திப்பு, சேர்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா மற்றும் ஹரிபாட் ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

 3. ரயில் எண். 16649 மங்களூர் சென்ட்ரல் - நாகர்கோவில் சந்திப்பு பரசுராம் எக்ஸ்பிரஸ், மங்களூரில் இருந்து மே 19ம் தேதி வரை புறப்படும் சேவைகள் எர்ணாகுளம் சந்திப்பு, சேர்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா மற்றும் ஹரிபாட் ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

4. ரயில் எண். 12625 திருவனந்தபுரம் சென்ட்ரல் - புது டெல்லி கேரளா தினசரி அதிவிரைவு ரயில், திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து மே 28ம் தேதி வரை புறப்படும் சேவைகள்(மே 22 மற்றும் 23ம் தேதி தவிர) ஹரிபாட், அம்பலப்புழா, ஆலப்புழா, சேர்த்தலா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

 5. ரயில் எண். 17229 திருவனந்தபுரம் சென்ட்ரல் - செகந்திராபாத் சந்திப்பு சபரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து மே 21 மற்றும் 22 தேதிகளில் புறப்பட வேண்டிய சேவைகள் ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஹரிபாட், அம்பலப்புழா, ஆலப்புழா, சேர்த்தலா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

6. ரயில் எண். 16382 கன்னியாகுமரி - புனே சந்திப்பு எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரில் இருந்து மே 28ம் தேதி வரை புறப்படும் சேவைக;(மே 22 மற்றும் 23ம் தேதிகள் தவிர) ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஹரிபாட், அம்பலப்புழா, ஆலப்புழா, சேர்த்தலா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

7. ரயில் எண். 22678 கொச்சுவேலி - யஸ்வந்த்பூர் வாராந்திர ஏசி சூப்பர் பாஸ்ட் ரயில், மே 27ம் தேதி கொச்சுவேலி ரயில் நிலையத்தில் புறப்படும் சேவை ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஹரிபாட், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

8. ரயில் எண். 12202 கொச்சுவேலி - மும்பை லோக்மான்ய திலக் கரிப் ரத் எக்ஸ்பிரஸ், மே 19, 22 மற்றும் 26ம் தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் சேவைகள், ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஹரிபாட், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.


9. ரயில் எண். 12778 கொச்சுவேலி - ஹூப்பள்ளி வாராந்திர அதிவிரைவு ரயில், மே 19 மற்றும் 26ம் தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் சேவைகள் ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஹரிபாட், அம்பலப்புழா, ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

10. ரயில் எண். 18567 விசாகப்பட்டினம் சந்திப்பு - கொல்லம் சந்திப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டினத்திலிருந்து மே 26ம் தேதி புறப்படும் சேவை ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் சேர்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா மற்றும் ஹரிபாட் ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

11. ரயில் எண். 12623 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் மெயில், மே 20, 21 மற்றும் 22ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சேவைகள் ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் எர்ணாகுளம் சந்திப்பு, சேர்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா மற்றும் ஹரிபாட் ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

12. ரயில் எண். 16525 கன்னியாகுமரி - கே.எஸ்.ஆர் பெங்களூரு ஐலண்ட் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரியில் இருந்து மே 21ம் தேதி புறப்படும் சேவை ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஹரிபாட், அம்பலப்புழா, ஆலப்புழா, சேர்த்தலா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

13. ரயில் எண். 16312 கொச்சுவேலி - ஸ்ரீ கங்காநகர் வாராந்திர எக்ஸ்பிரஸ், மே 21 மற்றும் 28ம் தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் சேவைகள் ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஹரிபாட், அம்பலப்புழா, ஆலப்புழா, சேர்த்தலா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

14. ரயில் எண். 12624 திருவனந்தபுரம் சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் மெயில், திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து மே 22 மற்றும் 23 தேதிகளில் புறப்படும் சேவைகள் ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஹரிபாட், அம்பலப்புழா, ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படும்.

15. ரயில் எண். 12659 நாகர்கோவில் சந்திப்பு - ஷாலிமார் குருதேவ் வாராந்திர எக்ஸ்பிரஸ், நாகர்கோவிலில் இருந்து மே 22ம் தேதி புறப்பட வேண்டிய சேவை ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஹரிபாட், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

16. ரயில் எண். 22648 கொச்சுவேலி - கோர்பா அதிவிரைவு ரயில், மே 23 மற்றும் 26ம் தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து புறப்பட வேண்டிய சேவைகள் ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஹரிபாட், அம்பலப்புழா, ஆலப்புழா, சேர்த்தலா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும். 

18. ரயில் எண். 12257 யஸ்வந்த்பூர் சந்திப்பு - கொச்சுவேலி கரிப் ரத் எக்ஸ்பிரஸ், மே 22, 24 மற்றும் 26ம் தேதிகளில் யஸ்வந்த்பூரில் இருந்து புறப்படும் சேவைகள் ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் எர்ணாகுளம் சந்திப்பு, சேர்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா மற்றும் ஹரிபாட் ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

19. ரயில் எண். 16334 திருவனந்தபுரம் சென்ட்ரல் - வெரவல் சந்திப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ், மே 23ம் தேதி திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்படும் சேவை ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஹரிபாட், அம்பலப்புழா, ஆலப்புழா, சேர்த்தலா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

20. ரயில் எண். 15906 திப்ருகார் - கன்னியாகுமரி விவேக் வாராந்திர அதிவிரைவு ரயில், திப்ருகாரில் இருந்து மே 21ம் தேதி புறப்படும் சேவை ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் எர்ணாகுளம் சந்திப்பு, ஆலப்புழா மற்றும் ஹரிபாட் ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

21. ரயில் எண். 12201 மும்பை லோக்மான்ய திலக் - கொச்சுவேலி கரிப் ரத் எக்ஸ்பிரஸ். மே 23 மற்றும் மே 27ம் தேதிகளில் மும்பையில் இருந்து புறப்படும் சேவைகள் ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் எர்ணாகுளம் சந்திப்பு, ஆலப்புழா மற்றும் ஹரிபாட் ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

22. ரயில் எண். 12626 புது தில்லி - திருவனந்தபுரம் கேரள அதிவிரைவு ரயில், மே 22, 23, 24, 25 மற்றும் 26ம் தேதிகளில் புது தில்லியில் இருந்து புறப்படும் சேவைகள் ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் எர்ணாகுளம் சந்திப்பு, சேர்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா மற்றும் ஹரிபாட் ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.


23. ரயில் எண். 16336 நாகர்கோவில் சந்திப்பு - காந்திதாம் சந்திப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ், நாகர்கோவிலில் மே 24ம் தேதி புறப்படும் சேவை ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஆலப்புழா, சேர்தலா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

24. ரயில் எண். 22113 மும்பை லோக்மான்ய திலக் - கொச்சுவேலி எக்ஸ்பிரஸ், மே 24ம் தேதி மும்பையில் இருந்து புறப்படும் சேவை ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் எர்ணாகுளம் சந்திப்பு, ஆலப்புழா மற்றும் ஹரிபாட் ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

25. ரயில் எண். 12258 கொச்சுவேலி - யஷ்வந்த்பூர் கரிப் ரத் எக்ஸ்பிரஸ், மே 25 அன்று கொச்சுவேலியில் இருந்து புறப்படும் சேவை ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஹரிபாட், அம்பலப்புழா, ஆலப்புழா, சேர்த்தலா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

26. ரயில் எண். 16311 ஸ்ரீ கங்காநகர் - கொச்சுவேலி வாராந்திர எக்ஸ்பிரஸ், மே 24ம் தேதி ஸ்ரீ கங்காநகரில் இருந்து புறப்படும் சேவை ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் எர்ணாகுளம் சந்திப்பு, ஆலப்புழா மற்றும் ஹரிபாட் ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

27. ரயில் எண். 16318 ஸ்ரீ மாதவைஷ்ணோதேவி கத்ரா - கன்னியாகுமரி ஹம்சபார் வாராந்திர எக்ஸ்பிரஸ், மே 23ம் தேதி கத்ராவிலிருந்து புறப்படும் சேவை ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் எர்ணாகுளம் சந்திப்பு, சேர்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா மற்றும் ஹரிபாட் ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

28. ரயில் எண். 19259 கொச்சுவேலி - பாவ்நகர் வாராந்திர விரைவு வண்டி, மே 26ம் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்படும் சேவை ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஹரிபாட், அம்பலப்புழா, ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

29. ரயில் எண். 22114 கொச்சுவேலி - மும்பை லோக்மான்ய திலக் வாராந்திர எக்ஸ்பிரஸ், மே 26ம் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்பட வேண்டிய சேவை ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் ஹரிபாட், அம்பலப்புழா, ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் சந்திப்பு ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

30. ரயில் எண். 12660 ஷாலிமார் - நாகர்கோவில் சந்திப்பு குருதேவ் வாராந்திர அதிவிரைவு ரயில், ஷாலிமாரில் இருந்து மே 25ம் தேதி புறப்பட வேண்டிய சேவை ஆலப்புழா வழியாக இயக்கப்படும். இந்த ரயில் எர்ணாகுளம் சந்திப்பு, ஆலப்புழா மற்றும் ஹரிபாட் ஆகிய இடங்களில் கூடுதலாக நின்று செல்லும்.

இவை தவிர சில ரயில்கள் சிறிது நேரம் தாமதமாக இயக்கப்படவுள்ளன.