முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள் :
1. திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து காலை 10:10க்கு புறப்படும், வண்டி எண் 16054 திருப்பதி - சென்னை சென்ட்ரல் விரைவு வண்டி, மே 17 மற்றும் 18ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
2. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:15க்கு புறப்படும், வண்டி எண் 16053 சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு வண்டி, மே 17 மற்றும் 18ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மே 17 மற்றும் 18ம் தேதிகளில் பகுதி தூரம் ரத்து செய்யப்படும் ரயில்கள் :
1. பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:20க்கு புறப்படும், வண்டி எண் 12608 பெங்களூர் - சென்னை சென்ட்ரல் 'லால்பாக்' அதிவேக வண்டி காட்பாடி வரை மட்டுமே இயங்கும். இந்த ரயில் காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது.
2. கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:15க்கு புறப்படும், வண்டி எண் 12680 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் அதிவேக வண்டி காட்பாடி வரை மட்டுமே இயங்கும். இந்த ரயில் காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது.
3. மைசூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5மணிக்கு புறப்படும், வண்டி எண் 12610 மைசூர் - சென்னை சென்ட்ரல் அதிவேக வண்டி காட்பாடி வரை மட்டுமே இயங்கும். இந்த ரயில் காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது.
4. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1:35க்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 12609 சென்னை சென்ட்ரல் - மைசூர் அதிவேக வண்டி, காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3:45க்கு புறப்படும். இந்த ரயில் சென்னை - காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது.
5. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:30க்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 12679 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் அதிவேக வண்டி, காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4:20க்கு புறப்படும். இந்த ரயில் சென்னை - காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது.
6. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3:30க்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 12607 சென்னை சென்ட்ரல் - பெங்களூர் 'லால்பாக்' அதிவேக வண்டி, காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5:35க்கு புறப்படும். இந்த ரயில் சென்னை - காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது.
Social Plugin