சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

மானாமதுரை - ராமநாதபுரம் மின்சார ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை ஆய்வு


மதுரை - ராமநாதபுரம் இடையே 107 கிலோமீட்டர் நீளமுள்ள அகல ரயில் பாதையில் மின்சார மயமாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதில் 47 கிலோ மீட்டர் தூரமுள்ள  மதுரை -  மானாமதுரை அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவுபெற்று கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி அன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். தற்போது அந்த பகுதியில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது மானாமதுரை - ராமநாதபுரம் இடையே 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சார மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அந்த புதிய மானாமதுரை - ராமநாதபுரம் மின்சார ரயில் பாதையை பெங்களூர் தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய், நாளை ஜனவரி 30ஆம் தேதியன்று ஆய்வு செய்கிறார்.

ஆய்விற்கு பின்பு நாளை ராமநாதபுரத்திலிருந்து மானாமதுரை வரை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் வேக சோதனை ஓட்டம் நடத்த இருக்கிறார். இந்த சோதனை ஓட்டம் நடைபெறும் காலகட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ரயில் பாதை அருகில் குடியிருப்போர் ரயில் பாதையை கடக்கவோ, நெருங்கவோ வேண்டாம் என எச்சரிக்கப் படுகிறார்கள்.

Electrification work has been carried out on the 107 km stretch railway line between Madurai and Ramanathapuram. The electrification work on the 47 km Madurai - Manamadurai railway line was already completed and inspected by the Commissioner of Railway Safety last December.

The electrification work for the 60 km stretch between Manamadurai - Ramanathapuram has also been completed now. The new Manamadurai-Ramanathapuram electrified line will be inspected by Bangalore Southern Circle Commissioner of Railway Safety  Shri Abhai Kumar Rai on January 30.

After the inspection, a speed trial will be conducted between Ramanathapuram and Manamadurai between 14.00 hrs to 17.00 hrs on 30th January, 2022.

Public and residents in the vicinity are cautioned not to cross or approach the track during the speed trial