சிறந்த மேம்பாட்டுக்கான பரிந்துரை : ஐ.சி.எப் நிறுவனத்திற்கு பரிசு

2020 - 21ம் ஆண்டுக்கான சிறந்த பரிந்துரைகளுக்கு, ரயில்வே அமைச்சகத்தால் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரயில் பாதையில் மேம்பாட்டு பணிக்காகவும், மின் சிக்கனம், ஆண்டுக்கு 110 கோடி ரூபாய் வரை சேமிக்கும் வகையில், மின்சார ரயின் இன்ஜின் இயக்கம் குறித்து சிறந்த பரிந்துரை வழங்கியதற்காக, தெற்கு, மேற்கு ரயில்வேக்கு முதல் பரிசு, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இரண்டு நிறுவனங்களுக்கு பரிசு தொகை 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மின் சக்தியை இழப்பின்றி முழுதுமாக பயன்படுத்துவதற்கான வழிகாட்டி பரிந்துரைக்கு, தெற்கு ரயில்வேக்கு மூன்றாவது பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டு, 33 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மேலும் ரயில் பெட்டி தயாரிப்பில், பக்கவாட்டு சுவர் மற்றும் கூரை இணைப்புகளின் மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாக, சென்னையில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்., அனுப்பிய பரிந்துரை இரண்டாம் பரிசுக்கு தேர்வாகி உள்ளது. இதே போல் கிழக்கு ரயில்வேயால் அனுப்பப்பட்ட பரிந்துரை சிறந்த பரிந்துரைக்கான இரண்டாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

🚂

கருத்துரையிடுக

புதியது பழையவை