ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், மதுரை, திருநெல்வேலி வழியாக மைசூர் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக மதுரை வழியாக மைசூர் - திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

வண்டி எண் 06201 மைசூர் - திருவனந்தபுரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் ஜனவரி 12 அன்று மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06202 திருவனந்தபுரம் - மைசூர் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் ஜனவரி 13 அன்று திருவனந்தபுரத்திலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.30 மணிக்கு மைசூர் சென்று சேரும்.

இந்த ரயில்கள் மாண்டியா, கெங்கேரி, பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மெண்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அட்டவணை.

06201 திருவனந்தபுரம்நிறுத்தம்06202 மைசூர்
12.05மைசூர்5:30
12.34/12.35மாண்டியா03.23/03.25
13.35/13.36கெங்கேரி02.23/02.25
14.05/14.15பெங்களூர்02.00/02.05
14.25/14.27பெங்களூர் கண்டோன்மெண்ட்01.35/01.37
15.27/15.29ஓசூர்00.20/00.22
17.30/17.32தர்மபுரி22.05/22.07
19.25/19.30சேலம்20.45/20.50
20.05/20.07நாமக்கல்19.47/19.48
20.38/20.40கரூர்19.13/19.15
22.30/22.40திண்டுக்கல்17.40/17.45
00.15/00.20மதுரை16.10/16.15
02.28/02.30விருதுநகர்15.18/15.20
03.13/03.15கோவில்பட்டி14.23/14.25
04.30/04.35திருநெல்வேலி14.00/14.05
05.58/06.00நாகர்கோவில் டவுன்12.05/12.07
7:30திருவனந்தபுரம் சென்ட்ரல்10:30

இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Festival Special Trains between Mysore – Thiruvananthapuram

Train No.06201 Mysore – Thiruvananthapuram Festival Special Train will leave Mysore at 12.05 hrs. on 12.01.2022 to reach Thiruvananthapuram at 07.30 hrs. the next day.

Train No.06202 Thiruvananthapuram – Mysore Festival Special Train will leave Thiruvananthapuram at 10.30 hrs. on 13.01.2022 to reach Mysore at 05.30 hrs. the next day.

Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 2, Sleeper Class – 7 & General Second Class – coaches.

Stoppages:  Mandya, Kengeri, Bengaluru, Bengaluru Cantonment, Hosur, Dharmapuri, Salem, Namakkal, Karur, Dindigul, Madurai, Virudhunagar, Kovilpatti, Tirunelveli and Nagercoil Town.


🚂

கருத்துரையிடுக

புதியது பழையவை