காரைக்குடி - திருவாரூர் இடையே 73 ரயில்வே கிராசிங்குகளிலும் கேட் கீப்பர்கள்

காரைக்குடி - திருவாரூர் இடையே 73 ரயில்வே கிராசிங்குகளிலும் கேட் கீப்பர்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் முன்னாள் படைவீரர்களை தேர்வு செய்து வருகிறது.

கூடுதல் பயண நேரம்.

காரைக்குடி - திருவாரூர் இடையே 73 ரயில்வே கிராசிங்குகளில் கேட் கீப்பர்கள் இல்லை. இதனால் தற்போது ஒவ்வொரு கிராசிங்கிலும் ரயில் வந்ததும் முதல் பெட்டியிலிருக்கும் ஊழியர் கீழே இறங்கி ரயில்வே கேட்டை அடைப்பார். பின்னர் கிராசிங்கை ரயில் கடந்ததும் கடைசி பெட்டியில் இருக்கும் ஊழியர் கீழே இறங்கி கேட்டை திறந்துவிடுகிறார். அதன் பின் ரயில் புறப்பட்டுச் செல்கிறது.

இந்த முறையால் கால விரயம் ஏற்படுகிறது. 146 கி.மீ. தூரத்தை ரயில் கடந்து செல்ல 6 மணி நேரமாகிறது.

திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு காரைக்குடியை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் காரைக்குடியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருவாரூரை சென்றடைகிறது.

விரைவில் பயண நேரம் குறையும்.

500 நபர்கள் விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் 73 ரயில்வே கிராசிங்குகளிலும் கேட் கீப்பர் களை நியமிக்க முன்னாள் படைவீரர் களை ரயில்வே நிர்வாகம் தேர்வு செய்து வருகிறது. அவர்களுக்கு பயிற்சி அளித்து பணியில் அமர்த்தியதும் ரயிலின் பயண நேரம் குறைக்கபடவுள்ளது.

மூன்று ரயில்கள் இயக்க பரிந்துரை.

தாம்பரத்தில் இருந்து வாரத்தில் மூன்று நாட்கள் பகல் நேர ரயில், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் இருமுறை மற்றும் தாம்பரம் - காரைக்குடி தினசரி இரவு நேர ரயில் ஆகிய மூன்று ரயில்களை இயக்க பரிந்துரைகளை ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி உள்ளதாக திருச்சி கோட்ட மேலாளர் வானொலியில் நேரலையில் தெரிவித்துள்ளார்.

🚂

கருத்துரையிடுக

புதியது பழையவை