தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திலிருந்து மேலமருதூர் வரை நாளை(ஜன 12) அதிவேக ரயில் இயக்கி சோதனை

மதுரை - தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திலிருந்து மேலமருதூர் வரை 18 கிமீ தூரத்திற்கு புதிய ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த புதிய ரயில் பாதையில் புதன்கிழமை (12.01.2022) அன்று ரயில் இன்ஜின் சோதனை வேக ஓட்டம் நடைபெற உள்ளது.

ஜனவரி 12 அன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இரு மார்க்கத்திலும் ரயில் இன்ஜின் 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடைபெற உள்ளது.

எனவே அந்த நேரத்தில் பொதுமக்களும் புதிய ரயில் பாதை அருகே வசிப்போரும் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Laying of new railway line is underway between Madurai and Thoothukudi via Aruppukottai and Vilathikulam. As part of this project, work has been completed for 18 km stretch from Thoothukudi Meelavittan Railway Station to Melamarudur.

The locomotive speed trial run is scheduled to take place on Wednesday (12.01.2022) on this new track. The test run of the locomotive would be at 120 kmph on both directions on January 12 between 11.00 hrs and 16.00 hrs.

Hence, the public and those living to the vicinity of the new railway line are cautioned not to approach or cross the railway line during the speed trial.

🚂

கருத்துரையிடுக

புதியது பழையவை