சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

சமுத்திரம் ரயில் நிலையத்தில் திருச்சி முன்பதிவில்லா விரைவு ரயில் நின்று செல்லும்.

திருச்சி முன்பதிவில்லா விரைவு ரயில், சமுத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திண்டுக்கல் - திருச்சி - திண்டுக்கல் முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் டிசம்பா் 23 முதல் மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

திண்டுக்கல் - திருச்சி சிறப்பு ரயில் (06498) மற்றும் திருச்சி - திண்டுக்கல் சிறப்பு ரயில் (06499) ஆகியவை சமுத்திரம் ரயில்  நிலையத்திலிருந்து முறையே காலை 7.43 மணிக்கும் மற்றும் மாலை 6.58 மணிக்கும் புறப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.