சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

செங்கோட்டை - கொல்லம் விரைவு ரயில்: ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

செங்கோட்டை முன்பதிவில்லா விரைவு ரயில் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

செங்கோட்டை - கொல்லம் சிறப்பு ரயில் (06659) மற்றும் கொல்லம் - செங்கோட்டை சிறப்பு ரயில் (06660) ஆகியவை ஆரியங்காவு ரயில் நிலையத்திலிருந்து முறையே பிற்பகல் 12.05 மணிக்கும் மற்றும் பிற்பகல் 1.08 மணிக்கும் புறப்படும்.