சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

தலச்சேரி - வயநாடு - வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு ரயில் பாதை அமைக்க ஆய்வு

Photo credits - The Hindu

கேரள மாநிலம் தலச்சேரி - வயநாடு - வழியாக கர்நாடக மாநிலம் மைசூரு இடையே 300 கி.மீ., க்கு புதிய ரயில்பாதை அமைக்க ஆய்வு பணி துவக்கப்பட்டது.

ஐதராபாத்தில் உள்ள தேசிய புவியியல் ஆய்வு குழு அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பொறியாளர்கள் கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி பகுதிக்கு கடந்த வியாழன் அன்று வந்தனர்.

இவர்கள், ஹெலிகாப்டர் மூலம் தலச்சேரி - வயநாடு - மைசூரூ இடையே ( 300 கி.மீ.,) ரயில்வே பாதை அமைய உள்ள, பகுதியை மின்னணு காந்தசாதனத்தின் மூலம் ஆய்வு செய்யவுள்ளனர். மேலும் நிலத்தின் தன்மை, பாறைகள், சதுப்பு நிலங்கள், வனப்பகுதிகள் மற்றும் ஆறுகள் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஆய்வுகளையும் இவர்கள் மேற்கொள்கின்றனர்.

தலச்சேரி - வயநாடு - மைசூரூ ரயில் பாதை செயல்பாட்டிற்கு வந்தால், தமிழகத்தில் உள்ள கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதி மக்கள் எளிதாக வயநாடு வழியாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு செல்ல வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.