சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

சென்னை எழும்பூரில் இருந்து மும்பை மற்றும் சேலம் ரெயில்கள் மீண்டும் இயக்க திட்டம் : வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ஓடுமாம் !

சென்னை எழும்பூரில் இருந்து சேலம் மற்றும் மும்பைக்கு வாரம் மூன்று நாட்களுக்கு அதிவிரைவு ரயில் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் இரவு 11.55 மணிக்கு அதிவிரைவு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 6.10 மணிக்கு சேலத்தை அடையும். இந்த ரயில் சேவை டிச.2-ஆம் தேதி தொடங்குகிறது.

மறுமாா்க்கமாக, சேலத்தில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில் இரவு 9.40 மணிக்கு புறப்படும். மறுநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும். இந்த ரயில் சேவை டிச.3-ஆம் தேதி தொடங்குகிறது.

Train No. 22153 Chennai Egmore - Salem Tri-Weekly Superfast ExpressStationTrain No. 22154 Salem - Chennai Egmore Tri-Weekly Superfast Express
23.55Chennai Egmore3:50
00.23/00.25Tambaram03.08/03.10
00.53/00.55Chengalpattu02.38/02.40
02.13/02.15Villupuram01.15/01.20
03.05/03.15Vriddhachalam00.10/00.20
04.14/04.15Chinna Salem23.09/23.10
04.39/04.40Attur22.44/22.45
04.59/05.00Ettapur Road22.29/22.30
05.09/05.10Valappadi22.19/22.20
05.29/05.30Ayodhyapattanam22.01/22.02
05.39/05.40Salem Town21.49/21.50
6:10Salem21:40

இதுதவிர, மும்பை சிஎஸ்எம்டி -சென்னை எழும்பூா் இடையே வாரம் மூன்று முறை அதிவிரைவு ரயில் மீண்டும் இயக்கப்படவுள்ளது.

மும்பை சத்திரபதி முனையத்தில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10:55 க்கு அதிவிரைவு ரயில் புறப்பட்டு, மறுநாள் இரவு 10:15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேரும்.

மறு மார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து வியாழன், சனி மற்றும் திங்கள்கிழமைகளில் காலை 6:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5:50க்கு மும்பை சென்றடையும்.


 

இந்த ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.