சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

நவீன பயணசீட்டு கட்டுப்பாட்டு மையம் : தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் துவக்கி வைத்தார்

தெற்கு ரயில்வே, தென்மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகிய மண்டலங்களுக்கான பயணச்சீட்டு கட்டுப்பாட்டு மையம் சென்னை மூா்மாா்க்கெட் கட்டடத்தின் 7-ஆவது மாடியில் செயல்படுகிறது. இந்த மையம் அதே கட்டடத்தின் 2-ஆவது மாடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய மையத்தில் விசாலமான அரங்கில் தகவல் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. 16 அலமாரிகளில் தகவல் கருவிகளும், 10 அலமாரிகளில் தொலைத்தொடர்பு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன. 

இந்த தரவு மையத்தை கண்காணிக்கும் பயணிகள் போக்குவரத்து முதன்மை வர்த்தக மேலாளர் அலுவலகம், ரயில்வே தகவல் அமைப்பு மையம், கட்டுப்பாட்டு மையம், தகவல் மேலாண்மை அலுவலகம் ஆகியவையும் விசாலமான முறையில் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன.

தடையில்லா மின்சாரம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள், மேம்பட்ட குளிர்சாதன வசதி, தீ விபத்து ஏற்படுவதை கண்டறிவது மற்றும் தானியங்கி தீயணைப்பு முறை, கண்காணிப்பு கேமரா மற்றும் தொடர் பாதுகாப்பு ஏற்பாடுகள், மழைநீர் உட்புகுவதை தடுக்கும் கருவி, பூச்சிகளை அழிக்கும் கருவி, ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை திட்டம், நவீன உட்கட்டமைப்பு, சீரான கம்பி வட அமைப்பு, இணைப்பில்லா இணையசேவை மற்றும் பொது அறிவிப்பு கருவி ஆகியவை இந்த புதிய மையத்தின் சிறப்பு அம்சங்களாகும்.

இந்தப் புதிய மையம் ரூபாய் 14.31 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய மையத்தின் வாயிலாக பயணச்சீட்டு வழங்கும் வசதி புதன்கிழமை காலை முதல் துவங்கியுள்ளது. இந்த மையத்தை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் இன்று/புதன்கிழமை காலை துவக்கி வைத்தார்.