சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

போத்தனுர் - பொள்ளாச்சி இடையே நடைபெற்ற மின்சார என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி

போத்தனூா் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுசமீபத்தில் நிறைவுற்றது.

இந்த சூழ்நிலையில் இன்று காலை 11:22மணி அளவில் 25 கிலோவாட் மின் ஆற்றல் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து போத்தனுர் ➡️ பொள்ளாச்சி இடையே இன்று மின்சார என்ஜின் இயக்கி ரயில்வே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். போத்தனுர் ரயில் நிலையத்தில் புறப்பட்ட மின்சார என்ஜின் சுமார் பகல் 12:21 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. பின்னர் பிற்பகல் 1:16க்கு பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் புறப்பட்ட இன்ஜின் பிற்பகல் 1:50 போத்தனுர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் போது தலைமை மின் பொறியாளர் ஸ்ரீ சஜி. கே. அப்ரஹாம், உதவி கோட்ட மின் பொறியாளர் ஸ்ரீ கே.தியாகராஜன் 
மற்றும் மேற்பார்வையாளர்கள் குழு உடனிருந்தனர்.

சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட என்ஜின் எண் 22018 (WAP - 1 வகை) இல் ஸ்ரீ எம் ஜெயகாந்தன் (லோகோ பைலட்) மற்றும் ஸ்ரீ ஆசிஷ் ஜி நிர்மல் (உதவி லோகோ பைலட்) ஆகியோர் பணியாற்றினர்.

இதனை தொடர்ந்து போத்தனுர் ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் ஒன்று பொள்ளாச்சி நோக்கி மின்சார என்ஜின் கொண்டு இயக்கப்பட்டது.

இந்த ஆய்வு அறிக்கை தென் பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு சமர்பிக்கப்படவுள்ளது. அதன் பிறகு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த தடத்தில் மின்சார இன்ஜின் இயக்கி சோதனை மேற்கொள்வார்.