இந்நிலையில் நாளை(செப் 1) காலை 8 மணியில் இருந்து பகல் 12 மணிக்குள் 25 கிலோவாட் மின் ஆற்றல் செலுத்தி போத்தனுர் ➡️ பொள்ளாச்சி ➡️ போத்தனுர் இடையே மின்சார என்ஜின் இயக்கி ரயில்வே அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த சோதனையின் போது மின்சார என்ஜினுக்கு கிடைக்கும் மின் ஆற்றல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
எனவே பொதுமக்கள் மின்சார கம்பிகள் அருகில் செல்லவோ, ரயில்கள் மீது ஏறவோ, உயர்மட்ட பாலத்தில் இருந்து மின்சார கம்பி மீது ஏதேனும் பொருட்களை வீசவோ கூடாது என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் கடவு பாதைகளை கடக்கும் கனரக வாகனங்கள், அனுமதிக்கப்பட்ட உயரத்திற்கு மேலே பொருட்கள் ஏற்றி செல்ல கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.
Social Plugin