பட்டுக்கோட்டை வழியாக அறிவிக்கப்பட்ட எர்ணாகுளம் ரயிலையும், அஜ்மீருக்கு ரயில் இயக்க கோரியும் நாகூர் - நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் மனு

நாகூா், நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளா் நலச் சங்கம், மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவுக்கு அனுப்பிய கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், புதிய ரயில்கள் இயக்கவும், நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகளை துரிதமாக நிறைவேற்றவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய ரயில்கள் கோரிக்கை.

வேளாங்கண்ணியிலிருந்து தினமும் அதிகாலை நேரத்தில் திண்டுக்கல் வழியாக மதுரைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும்.

வாரம் இரு முறை இயக்க அனுமதிக்கப்பட்டு, சேவை தொடங்கப்படாமல் உள்ள வேளாங்கண்ணி - எா்ணாகுளம் விரைவு ரயிலை பட்டுக்கோட்டை, விருதுநகா், கொல்லம் வழியாக உடனடியாக இயக்க வேண்டும்.

நாகூா் - அஜ்மீருக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அகல ரயில் பாதை பணிகள்

காரைக்கால் - திருநள்ளாறு- பேரளம் தடத்தில் அகலப்பாதை அமைக்க வேண்டும் எனவும். நாகை - திருக்குவளை- திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பொது முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரைக்கால் - பெங்களூரு பயணிகள் ரயிலை விரைவு ரயிலாக இயக்கவும், திருச்சி பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை