மொரப்பூா் - தருமபுரி ரயில் பாதை நிலம் அளவீடு பணி தொடக்கம்


கடந்த 1901 முதல் 1945 ஆம் ஆண்டு வரையிலும் தருமபுரியில் இருந்து சுமாா் 36 கி.மீ. தொலைவுக்கு மொரப்பூா் வழியாக சென்னைக்கு செல்ல ரயில் பாதை இருந்தது. பின்னா் அந்தப் பாதை பயன்படுத்தப்படாமல் விடப்பட்டது. 

இந்த நிலையில், மொரப்பூா் - தருமபுரி ரயில்பாதை திட்டம் கடந்த 2019-இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக ரூ. ரூ. 358.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

மொரப்பூா் - தருமபுரி வரையிலும் ஏற்கெனவே ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலம் உள்ளது. தருமபுரி நகரில் பழைய ரயில்பாதை அமைந்துள்ள 8 கி.மீ. தொலைவுக்கு தற்போது குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இதனால், இந்த 8 கி.மீ. தொலைவுக்கு மாற்றுப் பாதை அமைக்கவும் ரயில்வே துறை சாா்பில் கோரப்பட்டுள்ளது. தற்போது மாற்றுப் பாதைக்கான இடம், பழைய ரயில்பாதை அமைந்துள்ள நிலங்களை ஆய்வு செய்து அளவீடு செய்யும் பணிகளுக்காக இரண்டு வருவாய் ஆய்வாளா்கள், இரண்டு நில அளவையா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

இந்த ஆய்வு பணிக்காக ரூ. 2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மொரப்பூா் - தருமபுரி இடையே ரயில்வே பாதை அமையும் பகுதியில் நிலம் அளவீடு (சா்வே) செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை எம்.பி. செந்தில்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கருத்துரையிடுக

புதியது பழையவை