இறுதிக்கட்டத்தை எட்டியது கூடுவாஞ்சேரி - தாம்பரம் மூன்றாவது ரயில் பாதை பணிகள்

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ தூரத்துக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.

இதில் முதற்கட்டமாக செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில் - கூடுவாஞ்சேரி வரை புதிய பாதை அமைக்கப்பட்டு, தற்போது இந்த தடத்தில் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த மாதத்தில் மூன்றாவது தடத்தில் ரயில் போக்குவரத்து

இந்நிலையில், கூடுவாஞ்சேரி - தாம்பரம் இடையேயான ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகளும் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள சில பணிகளை அடுத்த ஒரு வாரத்தில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கொண்ட குழுவினர் வந்து ஆய்வு செய்து, ஒப்புதல் அளிப்பார்கள். அதன்பிறகு, இந்த தடத்தில் ரயில் சேவையைத் ரயில்வேத்துறையினர் தொடங்குவார்கள். 

கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்பு.

முழுமையான மூன்றாவது ரயில் பாதை செயல்பாட்டிற்கு வரும் போது, தாம்பரம் - செங்கல்பட்டு வரை கூடுதல் ரயில்களை இயக்க முடியும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை