ஐசிஎஃப் நிறுவனத்தை தனியாரிடம் கொடுக்க மாட்டோம் : மதிமுக பொதுச்செயலாளரிடம் ரயில்வே அமைச்சர் உறுதி

நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள ரயில் பவனில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை மதிமுக பொதுச்செயலர் வைகோ, ஈரோடு தொகுதி எம்.பி. அ.கணேசமூர்த்தி ஆகியோர் நேற்று மாலை சந்தித்தனர். 

இந்த சந்திப்பின்போது ரயில்வே அமைச்சரிடம், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களுள் மிகவும் லாபகரமாக இயங்குகின்ற நிறுவனம், சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலை ஆகும். அதுவும், அதைச் சார்ந்த உற்பத்தி அலகுகளும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தருகின்றன. அதைத் தனியார்மயம் ஆக்கப் போவதாகச் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. 

இதனால், தொழிற்சாலை தொழிலாளர்கள் இடையே அச்சம் நிலவுகின்றது. அதைத் தனியார்மயம் ஆக்கினால், ஆட்குறைப்பு செய்து விடுவார்கள். இதன் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழக்க நேரிடும். மேலும் தொழிலாளர்களின் நலன்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படும். எனவே, ஐசிஎஃப் நிறுவனத்தை, எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியார்மயம் ஆக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டார். 

அதற்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், எந்தக் காரணத்தைக் கொண்டும், ஐசிஎஃப் நிறுவனத்தை தனியாரிடம் கொடுக்க மாட்டோம் என உறுதியளித்திருக்கிறார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை