பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணிக்காக வரவழைக்கப்பட்ட பார்ஜர் விசைப்படகுடன் மோதல்



காணொளி நன்றி ஏ.என்.ஐ(ANI)

பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மற்றொரு புறம் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பாம்பன் கடலில் நடைபெறும் புதிய ரயில் பாலம் கட்டும் பணிக்காக கேரளாவில் உள்ள விழிஞ்சியத்தில் இருந்து ஒரு பார்ஜர் கப்பல் பாம்பன் வந்துள்ளது. இது பாம்பன் பாலத்தை கடந்து செல்வதற்காக, ரயில் பாலம் பராமரிப்பு அதிகாரிகள் தூக்குப் பாலத்தைத் திறக்க நேற்று பிற்பகலில் அனுமதி அளித்தனர்.

அப்போது மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகத்தால் ஒரு நாட்டுப் படகை உரசிக் கொண்டே வந்தது. தொடர்ந்து பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடக்கும் போது கிழக்குப் பகுதியில் உள்ள தூணில் மோதி பலத்த சப்தத்துடன் சென்றது. தொடர்ந்து வந்த விசைப்படகின் கம்பம் தூக்குப் பாலத்தில் மோதி சேதமடைந்தது.

இந்த சூழ்நிலையில், இந்த விபத்தால் தூக்குப் பாலம் சேதமடைந்திருக்குமா என்பது குறித்து முழுமையாக சென்சார் சோதனை செய்த பிறகே தெரிய வரும் என ரயில்வே அதிகாரிகள் கூறினார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை