அந்த வகையில் தற்போது கோயம்புத்தூர் 🔄 ராமேசுவரம் மற்றும் ஓகா 🔄 ராமேசுவரம் ஆகிய இரண்டு வாராந்திர ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;
கோவையில் இருந்து இன்று(ஜூலை 5) இரவு 7:45க்கு புறப்படும், வண்டி எண் 06618 கோயம்புத்தூர் ➡️ ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில், மண்டபம் - ராமேசுவரம் ரயில் நிலையங்களுக்கு இடையே இயங்காது.
ராமேசுவரத்தில் இருந்து நாளை(ஜூலை 5) இரவு 7:25க்கு புறப்படவுள்ள வண்டி எண் 06617 ராமேசுவரம் ➡️ கோயம்புத்தூர் சிறப்பு ரயில், மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
ஓகா ரயில் நிலையத்தில் இருந்து நாளை(ஜூலை 6) புறப்பட்டு, ஜூலை 8ம் தேதி ராமேசுவரம் வந்து சேர வேண்டிய வண்டி எண் 06734 ஓகா ➡️ ராமேசுவரம் சிறப்பு ரயில், மண்டபம் ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.
ராமேசுவரத்தில் இருந்து ஜூலை 9ம் தேதி புறப்படவுள்ள வண்டி எண் 06733 ராமேசுவரம் ➡️ ஓகா சிறப்பு ரயில், மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Social Plugin