பொள்ளாச்சி - போத்தனுர் மின் பாதையில் விரைவில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு : முதன்மை பொறியாளர் தகவல்

போத்தனூா் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகின்றன. 

பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்பணிகளை தென்னகர ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு முதன்மை பொறியாளா் சுனில், சேலம், பாலக்காடு கோட்ட சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது, போத்தனூரில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி வரை உள்ள ரயில்வே கிராசிங் மற்றும் ரயில் நிலையங்களில் சிக்னல் மற்றும் தொலைத்தொடா்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

இதனை தொடர்ந்து இந்த ஆய்வறிக்கையை தென்னக பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு சமா்ப்பித்து, விரைவில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துரையிடுக

புதியது பழையவை