ஜூலை 9ம் தேதி முதல் சிறப்பு ரயில் சேவை.
அதன்படி வண்டி எண் 06194 கோயம்புத்தூர் ➡️ திருப்பதி சிறப்பு ரயில், கோவையில் இருந்து வியாழன், வெள்ளி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 6மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1:20க்கு திருப்பதி சென்றடையும்.
மறு மார்க்கத்தில் வண்டி எண் 06193 திருப்பதி ➡️ கோயம்புத்தூர் சிறப்பு ரயில், திருப்பதியில் இருந்து வியாழன், சனி, திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் பிற்பகல் 2:55க்கு புறப்பட்டு, இரவு 10:45 கோவை ரயில் நிலையம் வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு நாளை(ஜூலை 6) காலை 8 மணி முதல் நடைபெறும்.
தமிழகத்தில் இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கோவை மார்க்கமாக பயணிக்கும் போது மட்டும் கோயம்புத்தூர் வடக்கு ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும்.
06194 திருப்பதி ⬇️ | நிறுத்தங்கள் | 06193 கோயம்புத்தூர் ⬆️ |
---|---|---|
6:00 | கோயம்புத்தூர் | 22.45 |
--- | கோவை வடக்கு | 22.19/22.20 |
06.43/06.45 | திருப்பூர் | 21.23/21.25 |
07.25/07.30 | ஈரோடு | 20.37/20.40 |
08.22/08.25 | சேலம் | 19.37/19.40 |
10.03/10.05 | ஜோலார்பேட்டை | 18.08/18.10 |
11.23/11.24 | காட்பாடி | 16.33/16.35 |
11.47/11.48 | சித்தூர் | 15.54/15.55 |
12.14/12.15 | பகலா | 15.24/15.25 |
13:20 | திருப்பதி | 14.55 |
Social Plugin