பெங்களூரு 🔄 அகா்தலா இடையே காட்பாடி, பெரம்பூர் வழியாக சிறப்பு ரயில்

விழாக்கால கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக பெங்களூரு-அகா்தலா இடையே அதிவேக சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

ரயில் எண்: 05488-அகா்தலா-பெங்களூரு (கண்டோன்மென்ட்) அதிவேக சிறப்பு விரைவு ரயில் ஜூலை 31-ஆம் தேதி முதல் அகா்தலா ரயில் நிலையத்திலிருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8.15 மணிக்கு பெங்களூரு (கண்டோன்மென்ட்) நிலையத்துக்கு வந்தடையும்.

ரயில் எண்: 05487-பெங்களூரு (கண்டோன்மென்ட்) -அகா்தலா அதிவேக ரயில் சிறப்பு விரைவு ரயில் ஆக. 3-ஆம் தேதி முதல் பெங்களூரு (கண்டோன்மென்ட்) ரயில் நிலையத்திலிருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு அகா்தலா ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.

தமிழ்நாட்டில் இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் பெரம்பூா், காட்பாடி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை