யஷ்வந்த்பூரில் இருந்து கேரளா மாநிலம் கொச்சுவெளிக்கு ஓசூர், தர்மபுரி, சேலம், கோவை வழியாக ஏழைகள் ரதம் சிறப்பு ரயில் சேவை


🚂 யஷ்வந்த்பூர் 🔄 கொச்சுவெளி சிறப்பு ரயில்.

07395 யஷ்வந்த்பூர் - கொச்சுவெளி விரைவு ரயில், யஷ்வந்த்பூரிலிருந்து செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 1:10 மணிக்கு கொச்சுவெளி சென்றடையும். இந்த ரயிலின் சேவை ஜூலை 29ம் தேதி தொடங்குகிறது.

அதேபோன்று எண். 07396 கொச்சுவெளி - யஷ்வந்த்பூர் விரைவு ரயில், கொச்சுவெளியில் இருந்து புதன், வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் மாலை, 5:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 9:30 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும். இந்த ரயிலின் சேவை ஜூலை 30ம் தேதி தொடங்குகிறது.

இந்த ரயிலில் மூன்று அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் 9 இணைக்கப்பட்டிருக்கும்.

நின்று செல்லும் நிலையங்கள்

யஷ்வந்த்பூரிலிருந்து புறப்படும் ரயில், பானஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கோயம்புத்துார், பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாாகுளம் டவுன், கோட்டயம், செங்கனசேரி, திருவல்லா, செங்கனுர், மாவெளிகர, காயன்குளம், கொல்லம் வழியாக கொச்சுவெளி சென்றடையும.

ரயில் அட்டவணை 👇

இதே போல் மற்றொரு குளிர்சாதன சிறப்பு ரயில் ஒன்று யஷ்வந்த்பூர் - கொச்சுவெளி இடையே இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

07385 யஷ்வந்த்பூர் - கொச்சுவெளி விரைவு ரயில், யஷ்வந்த்பூரிலிருந்து வியாழக்கிழமைகளில் மாலை 3:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:50 மணிக்கு கொச்சுவெளி சென்றடையும். இந்த ரயிலின் சேவை ஜூலை 22ம் தேதி தொடங்குகிறது.

அதேபோன்று எண். 07386 கொச்சுவெளி - யஷ்வந்த்பூர் விரைவு ரயில், கொச்சுவெளியில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் பகல், 12:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 4:30 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும். இந்த ரயிலின் சேவை ஜூலை 23ம் தேதி தொடங்குகிறது.

நின்று செல்லும் நிலையங்கள்

யஷ்வந்த்பூரிலிருந்து புறப்படும் ரயில், கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்துார், பாலக்காடு, திருச்சூர், எர்ணாாகுளம் டவுன், கோட்டயம், செங்கனுர், கொல்லம் வழியாக கொச்சுவெளி சென்றடையும.

இந்த ரயிலின் அட்டவணை 👇

கருத்துரையிடுக

புதியது பழையவை