சென்னை - மங்களூர் சிறப்பு ரயில் வழக்கம் போல் இயங்கும் : தென்னக ரெயில்வே அறிவிப்பு

புகைப்படம் நன்றி - தெற்கு ரயில்வே

சென்னை - ஜோலார்பேட்டை தடத்தில் நடைபெற்ற ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மங்களூர் செல்லும் சிறப்பு ரயில் எண் 06627 சென்னை - ஜோலார்பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் முன்னதாகவே நிறைவேற்றப்பட்ட காரணத்தால், மங்களூர் சிறப்பு ரயில் வழக்கம் போல இயங்கும் என தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி வண்டி எண் 06627 சென்னை சென்ட்ரல் - மங்களூர் சிறப்பு ரயில், நாளை(ஜூலை 26) முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 11:35க்கு வழக்கம் போல புறப்படும்.

அதே சமயம் இந்த சிறப்பு ரயிலின் அட்டவணையில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பிற்பகல் 1:15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை