சமுகவலைத்தளங்களில் வைரலாகும் அப்துல் கலாம் புகைப்படங்கள் : 800 கிலோ கழிவு பொருட்களை வைத்து ரயில்வே நிர்வாகம் உருவாக்கிய 7.8 அடி உயர சிலை.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான் அப்துல் கலாம் நினைவாக அவருக்கு இந்திய ரயில்வே சார்பில் பெங்களூரு, யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் கழிவு இரும்பு பொருட்களை வைத்து 7.8 அடி உயர சிலை உருவாக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் மிசைல் மேன் என அழைக்கப்படும் அப்துல் கலாம் இளைஞர்களுக்கு பெரும் வழிகாட்டியாக இருக்கிறார். அவரது உழைப்பிற்கு மரியாதை செய்யும் வகையில் இந்திய ரயில்வே நிர்வாகம் அவருக்காக ரயில் நிலையத்தில் சிலை ஒன்றை வைத்துள்ளது. அந்த சிலையை அவர்கள் ரயில்வேயில் உள்ள கழிவு பொருட்களாக இரக்கும் போல்ட், நட், கழிவு வயர், சோப் வைக்கும் தகடு உள்ளிட்ட கழிவு பொருட்களை வைத்து வடிவமைத்துள்ளனர். சுமார் 7.8 அடி உயரமுள்ள இந்த சிலை சுமார் 800 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.


இந்த சிலையை அவர்கள் பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் பொறுத்தியுள்ளனர். கடந்த 22ம் தேதி இந்த புகைப்படத்தை ரயில்வேத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில், அப்துல் கலாமின் நினைவு தினமான இன்று அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

கனவு நாயகனின் கனவுகளில் ஒன்று

ராமேஸ்வரத்தில் இருந்து டெல்லிக்கு ஒரு ரயிலும், சென்னைக்கு பகல் நேர ரயிலும் இயக்கப்பட்ட வேண்டும். அதில் மீன்களை பதப்படுத்தி கொண்டு செல்ல குளிரூட்டப்பட்ட சரக்கு பெட்டி வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை