கோவில்பட்டி, கடம்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்க புதுப்பிப்பு பணி

மதுரை கோட்டத்தில் ரயில்களை வேகமாக இயக்க ரூ.21.74 கோடி மதிப்பீட்டில் ரயில் பாதைகளை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

மதுரை கோட்டத்தில் ரயில்களை வேகமாக இயக்க, ரயில் பாதைகளை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவில்பட்டி, கடம்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே 11.50 கிலோ மீட்டா் தொலைவுள்ள ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 

மதுரை - வாஞ்சி மணியாச்சி பிரிவில் ரயில்கள் 100 கிலோ மீட்டா் வேகத்தில் இயக்கப்பட்டாலும், இந்தப் பகுதியில் கரிசல் மண் தொய்வு காரணமாக 70 கிலோ மீட்டா் வேகத்தில் மட்டுமே இயக்க முடிந்தது.

1991ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த 12 கிலோ மீட்டா் ரயில் பாதையில், 1 மீட்டா் ஆழம் தோண்டப்பட்டு, அதில் செம்மண் நிரப்பப்பட்டு நிலம் பலப்படுத்தப்படுகிறது. இந்த நிலத்தின் மேல் நவீன புதிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்தப் பணிகளுக்காக ரூ.21.74 கோடி செலவிடப்படுகிறது. பணிகள் முடிந்தவுடன் இந்தப் பகுதியிலும் ரயில்கள் 100 கிலோ மீட்டா் வேகத்தில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை