படிப்படியாக ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்துமாறு மண்டல ரயில்வே நிர்வாகங்களுக்கு ரயில்வேத்துறை உத்தரவு

கொரோனா தொற்றுகள் குறைந்து வரும் காரணத்தால், பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதியளிப்பதற்காகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்திற்காகவும், பல்வேறு இடங்களில் இருக்கும் காத்திருப்பு பட்டியலை கருத்தில் கொண்டும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை இந்திய ரயில்வே உயர்த்தி வருகிறது.

கொவிட்டுக்கு முந்தைய காலகட்டத்தில் சுமார் 1768 ரயில்கள் தினமும் இயக்கப்பட்டன.


2021 ஜூன் 18 நிலவரப்படி, சுமார் 983 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. கொவிட்டுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும் போது இது 56 சதவீதம் ஆகும். தேவைக்கேற்ப ரயில்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.

2021 ஜூன் 1 நிலவரப்படி, சுமார் 800 ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. 2021 ஜூன் 1 முதல் 2021 ஜூன் 18 வரை, சுமார் 660 கூடுதல் ரயில்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் மட்டும் மொத்தம் 70 ரயில்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நிலவரம் மற்றும் பயண சீட்டுகளுக்கான தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு படிப்படியாக ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்துமாறு மண்டல ரயில்வே நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை