முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி : விழுப்புரம் - செங்கல்பட்டு தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்.

ஜூன் 18, 23, 35, 30 ஆகிய தேதிகளில் ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

மதுரை- சென்னை எழும்பூருக்கு ஜூன் 18, 23, 25, 30 ஆகிய தேதிகளில், காலை 7 மணிக்கு இயக்கப்படும் விரைவு சிறப்பு ரயில் (02636) விழுப்புரம்-சென்னை எழும்பூா் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூா்-காரைக்குடிக்கு ஜூன் 18, 23, 25, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.45 மணிக்கு இயக்கப்படும் விரைவு சிறப்பு ரயில் (02605) சென்னை எழும்பூா்-விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி நோக்கி செல்லும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை