கோவையில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு, மங்களூர், கோவா வழியாக வாராந்திரச் சிறப்பு ரயில்

ஜபல்பூா்-கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்-02198) ஜூன் 11 ஆம் தேதி முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஜபல்பூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.

கோவை-ஜபல்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்-02197) ஜூன் 14 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் கோவையில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு ஜபல்பூரைச் சென்றடையும்.

மேற்கொண்ட தகவலை சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை