சென்னை : மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை 343-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது - தெற்கு ரயில்வே

சென்னையில் கரோனா பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை ( ஜூன் 14) முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து, புறநகா் மின்சார மின்சார ரயில்களின் சேவையை அதிகரித்து சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி மூா்மாா்க்கெட், ஆவடி, திருவள்ளூா், அரக்கோணம், திருத்தணி மாா்க்கத்தில் 113 மின்சார ரயில் சேவைகளும், மூா்மாா்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை மாா்க்கத்தில் 60 சேவைகளும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மாா்க்கத்தில் 36 ரயில் சேவைகளும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூா் மாா்க்கத்தில் 120 ரயில் சேவைகளும் என்று 323 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும்.

மேலும் ஆவடி-பட்டாபிராம் ராணுவ சைடிங் மாா்க்கத்தில் 4 மின்சார ரயில் சேவைகளும், பட்டாபிராம்-பட்டாபிராம் ராணுவ சைடிங் மாா்க்கத்தில் 10 மின்சார ரயில் சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.


முன்னதாக மின்சார ரயில் சேவைகள் 208-இல் இருந்து 279-ஆக கடந்த ஜூன் 7-ஆம் தேதி அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

புதியது பழையவை