ஜூன் 1ம் தேதி முதல் ரயில்களில் பயணிக்க இ பதிவு கட்டாயம்

* வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் தமிழகம் வருவோர் மற்றும் தமிழகத்திற்குள் ரயிலில் பயணம் செய்வோர் இ பதிவு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.


தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முதற்கட்ட தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதில் விமான-ரெயில் நிலையங்களுக்கு செல்வோர் இ-பதிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

வீடுகளில் இருந்து ரயில்-விமான நிலையம் செல்வோரும், அங்கிருந்து மறுபடியும் வீடுகளுக்கு செல்வோரும் கட்டாயம் இ-பதிவு பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டையுடன் கூடிய இ-பதிவு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நடைமுறை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அமலாக இருக்கும் 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு காலத்திலும் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இ பதிவு மேற்கொள்ள https://eregister.tnega.org/#/app/type

கருத்துரையிடுக

புதியது பழையவை