இந்த ஆய்வின் போது ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஓமலூர் - மெச்சேரி சாலை ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு சிறப்பு ரயில் அமைப்பைப் பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்துவார். அதனை தொடர்ந்து அதிவேக சோதனை ஓட்டம் பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் நடைபெறும்.
அது சமயம் ஓமலூர் - மேச்சேரி சாலை ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதைகளுக்கு அருகிலேயே வசிக்கும் மக்கள், ரயில் பாதைகளை அணுகவோ அல்லது மீறவோ கூடாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.