பாம்பனில் புதிய ரயில் பாலம் - தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மால்யா நேற்று ஆய்வு

பாம்பன் ரயில் தூக்கு பாலம் மற்றும் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில் பாலம் ஆகியவற்றை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மால்யா நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணி இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும். இப்பணி தற்போது 30 சதவீதம் முடிவடைந்து உள்ளதாகவும். தற்போதுள்ள ரயில் பாலம் சிறந்த உறுதித் தன்மையுடன் உள்ளது என்றும். இதனை ஐ.ஐ.டி. தொழில்நுட்பக் குழுவினர் சார் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணித்து வருவதாகவும். தற்போதுள்ள ரயில் பாலத்தில் 4 இரும்பு கர்டர்கள் மட்டும் மாற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மதுரை ெரயில்வே கோட்ட மேலாளர் லெனின் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

புகைப்படம் - தினத்தந்தி