அப்போது மத்திய, மாநில அரசுகளின் தலா 50 சதவீதம் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது. சென்னையில் முதற்கட்டமாக 44 கி.மீ.,க்கு மெட்ரோ ரயில் பாதை அமைத்து சேவை வழங்குகிறோம். கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன், சென்னை விமான நிலையம் இணைக்கப்பட்டுள்ளன. இப்பணி 2015-19 வரை நடந்தது. தற்போது ரூ.63 ஆயிரம் கோடியில் 2ம் கட்ட பணி துவங்கியுள்ளது. இதன் மூலம் 118.9 கிலோ மீட்டருக்கு மெட்ரோபாதை அமைகிறது. இதில் 42.6 கிலோ மீட்டருக்கு சுரங்கம் வருகிறது.
மதுரை மெட்ரோ: 20 லட்சம் மக்கள் தொகையுள்ள நகரில் மெட்ரோவை கொண்டுவர முடியும். தினமும் 20 ஆயிரம் பேர் வரை பயணிக்க வேண்டும். சென்னைக்கு அடுத்து கோவையில் மெட்ரோவிற்கான ஆய்வு முடிந்துள்ளது. மதுரையிலும் இச்சேவையை துவங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான ஆய்வு பணி விரைவில் துவங்கும், என்றார்.