செங்கோட்டை - திருநெல்வேலி வழித்தடத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு : கூடுதல் ரயில்கள் இயக்க செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை

புனலூர் – செங்கோட்டை – தென்காசி – பாவூர்சத்திரம் அம்பாசமுத்திரம் – திருநெல்வேலி வழித்தட ஆய்விற்காக புனலூரிலிருந்து சிறப்பு ரயிலில் வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸிடம் செங்கோட்டை தென்காசி வட்டார ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அதில் பாலக்காடு திருநெல்வேலி பாலருவி ரயிலுக்கு செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்லவும். குருவாயூர் – புனலூர் விரைவு ரயிலை செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் விருதுநகர் வழி மதுரை வரை நீட்டிக்கவும். செங்கோட்டை வழியாக சென்னை - கொல்லம் இடையே இயக்கப்படும் ரயிலின் நேரத்தை மாற்றியமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கண்ணாடி மேற்கூரை வசதி உள்ள விஸ்டாடோம் பெட்டிகள் செங்கோட்டை - புணலூர் வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில் இணைக்கவும். கோயம்புத்தூர், பெங்களூர், டெல்லி, திருப்பதி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கவும். சிலம்பு ரயிலை தினசரி இயக்கவும். செங்கோட்டை - தாம்பரம் இடையே அந்தியோதயா ரயில் இயக்கவும் கோரி உள்ளனர்.