கோவில்பட்டி - கடம்பூர் மற்றும் திருநெல்வேலி - கங்கைகொண்டன் தடத்தில் இரட்டை பாதை தொடர்பான பொறியியல் பணி : பிப் 28ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்.

மதுரை - நாகர்கோவில் இடையே நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் கங்கைகொண்டன் - மணியாச்சி, கடம்பூர் - மணியாச்சி மற்றும் மணியாச்சி - தட்டபாறை ரயில் தடங்கள்இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றது.

இந்நிலையில் கடம்பூர் - கோவில்பட்டி மற்றும் கங்கைகொண்டன் - திருநெல்வேலி இடையே தற்போது இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து தண்டவாள பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்.

வண்டி எண் 02627/02628 திருச்சி 🔄 திருவனந்தபுரம் இன்டர்சிட்டி சிறப்பு ரயில்கள் பிப் 28ம் தேதி வரை ரத்து.

பகுதி தூரம் ரத்து செய்யப்படும் ரயில்கள்.

வண்டி எண் 02631/02632 சென்னை எழும்பூர் 🔄 திருநெல்வேலி சிறப்பு ரயில், பிப் 24ம் தேதி முதல் பிப் 28ம் தேதி வரை மதுரை 🔄 திருநெல்வேலி இடையே ரத்து. இந்த ரயில் சென்னை எழும்பூர் 🔄 மதுரை இடையே மட்டுமே இயங்கும்.

வண்டி எண் 06321/06322 நாகர்கோவில் 🔄 கோயம்புத்தூர் சிறப்பு ரயில், பிப் 24ம் தேதி முதல் பிப் 28ம் தேதி வரை மதுரை 🔄 நாகர்கோவில் இடையே ரத்து. இந்த ரயில் கோயம்புத்தூர் 🔄 மதுரை இடையே மட்டுமே இயங்கும்.

வண்டி எண் 07235/07236 நாகர்கோவில் 🔄 பெங்களூர் சிறப்பு ரயில், பிப் 24ம் தேதி முதல் பிப் 28ம் தேதி வரை விருதுநகர் 🔄 நாகர்கோவில் இடையே ரத்து. இந்த ரயில் பெங்களூர் 🔄 விருதுநகர் இடையே மட்டுமே இயங்கும். 

வண்டி எண் 02667/02668 நாகர்கோவில் 🔄 கோயம்புத்தூர் சிறப்பு ரயில், பிப் 25ம் தேதி முதல் பிப் 28ம் தேதி வரை மதுரை 🔄 நாகர்கோவில் இடையே ரத்து. இந்த ரயில் கோயம்புத்தூர் 🔄 மதுரை இடையே மட்டுமே இயங்கும்.

வண்டி எண் 06235/06236 தூத்துக்குடி 🔄 மைசூர் சிறப்பு ரயில், பிப் 28ம் தேதி மதுரை 🔄 தூத்துக்குடி இடையே ரத்து. இந்த ரயில் மைசூர் 🔄 மதுரை இடையே மட்டுமே இயங்கும்.

வண்டி எண் 06071 மும்பை தாதர் 🔄 திருநெல்வேலி சிறப்பு ரயில், பிப் 28ம் தேதி விருதுநகர் 🔄 நாகர்கோவில் இடையே ரத்து. இந்த ரயில் மும்பை 🔄 விருதுநகர் இடையே மட்டுமே இயங்கும்.

மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள்.

06127 சென்னை எழும்பூர் ➡️ குருவாயூர் சிறப்பு ரயில், பிப் 24, 25, 26 மற்றும் 28ம் தேதிகளில் விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து தென்காசி வழியாக திருநெல்வேலி செல்லும். அதாவது இந்த ரயில் சாத்தூர், கோவில்பட்டி மற்றும் மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயங்காது.