பக்கவாட்டு கீழ் படுக்கையில் புதிய வசதி - Side Lower Berths gets new facilities

ரயிலில் கீழ் படுக்கை வசதி இருக்கையை முன்பதிவு செய்ய பலர் விரும்புவது வழக்கம். ஆனால், அந்த இருக்கை வசதி மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட சில பயணிகளுக்கே அது பெரும்பாலும் ஒதுக்கப்படும்.

கீழ் படுக்கை வசதியை பெரும்பாலானோர் விரும்பினாலும், ரயில் பெட்டியின் பக்கவாட்டு கீழ் படுக்கை வசதியை பலரும் விரும்புவதில்லை, ஏனெனில் இரண்டு தனித்தனி இருக்கைப் பகுதிகளை சேர்த்துப் போட்டு படுக்கும் போது, அதில் பிடிமானம் இல்லாததும், இரண்டு இருக்கைகளை ஒன்றாக சேர்க்கும் போது நடுவில் ஒரு சின்ன இடைவெளி இருப்பதும், அதனால் உடல் சமநிலையில் இல்லாமல் உறக்கம் வராமல் தவிப்பதுமே காரணமாக இருக்கிறது.இந்நிலையில், இரு இருக்கைகளை இணைத்துப் போட்டுவிட்டு, அதன் மேல் வேறொரு படுக்கை விரிப்பை போடும் வசதியை ரயில்வே ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பக்கவாட்டு கீழ் படுக்கை வசதி கிடைத்த பயணிகளும், மற்றப் பயணிகளைப் போலவே நிம்மதியாக உறங்க முடியும்.