அதன்படி ஜனவரி 4ம் தேதி முதல் இந்த ரயிலின் சேவை துவங்குகிறது. இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:40க்கு புறப்படும், 06079 பெங்களூர் சிறப்பு ரயில், பகல் 1:45க்கு பெங்களூர் சென்றடையும்.
மறுமார்கத்தில், பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:45க்கு புறப்படும், 06080 சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், இரவு 8:55க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும்.
இந்த ரயிலில் இரண்டு அமரும் வசதி கொண்ட குளிர்சாதன பெட்டிகளும், 14 இரண்டாம் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டிகளும், 5 பொது வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் முன்பதிவு கட்டாயம் என ரயில்வேத்துறை குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த ரயிலில் பேண்ட்ரி பெட்டி ஒன்றும் இணைக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;