விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி வழியாக திருப்பதிக்கு சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர் 
வழியாக திருப்பதிக்கு ஜனவரி 6ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

விழுப்புரத்தில் இருந்து காலை 5:25க்கு புறப்படும், வண்டி எண் 06854 விழுப்புரம் ➡️ திருப்பதி சிறப்பு ரயில், பகல் 12:20க்கு திருப்பதி ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்கத்தில், திருப்பதியில் இருந்து பகல் 12:35க்கு புறப்படும், வண்டி எண் 06853 திருப்பதி ➡️ விழுப்புரம் சிறப்பு ரயில், இரவு 8:15க்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;