தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதை பணிகளை விரைந்து துவக்க தர்மபுரி மக்களவை உறுப்பினர் ரயில்வே வாரிய தலைவரிடம் கோரிக்கை

தர்மபுரி - மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில்பாதை அமைக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் கடந்த 2019ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்திற்காக ரூ.358 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

36 கி.மீ. தூரம் கொண்ட இந்த ரெயில்பாதை திட்டத்திற்கு 28 கி.மீ. அளவிற்குரிய நிலம் ரெயில்வேயிடம் உள்ளது. மீதமுள்ள 8 கி.மீ. அளவுள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த நிலத்தை கையகப்படுத்தி தர தமிழக அரசு ரயில்வே துறையுடன் வழங்க வேண்டும்.

இந்நிலையில், இந்த திட்டத்தை விரைந்து துவக்க தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் அவர்கள் ரயில்வே வாரிய தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதில், இந்த திட்டத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் அடிக்கல் நாட்டியதாகவும். இதற்காக ரூ.358 கோடியே 95 லட்சம் நிதி ஒத்துக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மொரப்பூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கவும். தர்மபுரி, ஓசூர் மற்றும் மொரப்பூர் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும். பெங்களூரில் இருந்து ராமேஸ்வரதிற்கு புதிய ரயில் இயக்கவும். தர்மபுரி வழியாக பெங்களூர் செல்லும் பயணிகள் ரயில்களை சரியான நேரத்திற்கு இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.