சபரிமலை ரயில் திட்டத்தின் செலவைப் பகிர்ந்து கொள்ள கேரளா அரசு ஓப்புதல்

₹2,815.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகவுள்ள அங்கமாலி-சபரிமலை புதிய ரயில் பாதை திட்டத்திற்கு கேரளா அரசு 50% நிதி ஒதுக்க ஒப்புதல்.

சபரி ரயில் திட்டத்தின் செலவில் 50% மாநிலத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ரயில்வே மற்றும் மையத்தின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவை புதன்கிழமை கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்திலிருந்து (KIIFB) நிதி வழங்க முடிவு செய்துள்ளது.

அதன்படி 116 கி.மீ அங்கமாலி-அஜுதா சபரி ரயிலின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கு இந்திய ரயில்வே பொறுப்பாகும், அதே சமயம் ரயில் பாதை, ரயில் நிலைய மேம்பாடு பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் சிறப்பு புரிந்துணர்வு மூலம் இருக்கும்.

இந்த தடத்தில் செலவினங்களைக் கழித்த பின்னர் வரும் வருவாயில் மநிலத்திற்கும் இந்திய ரயில்வேக்கும் இடையில் 50:50 என்ற சதவிகிதத்தில் லாபம் பகிரப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

புகைப்படம் - தி ஹிந்து