சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயிலுக்கு வந்த சோதனை : வித்தியாசமாக யோசித்த தெற்கு ரயில்வே

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி அடிப்படையில் ஒரு சிறப்பு ரயிலும், வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.

இதில் தினசரி இயக்கப்படும் ரயில், சென்னையில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டை செல்லும். அதே சமயம் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் மற்றொரு ரயில், சென்னையில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செங்கோட்டை செல்லும்.

இந்நிலையில் இந்த இரண்டு ரயில்களும் 15 நிமிட இடைவெளியில் சென்னை எழும்பூரில் இருந்து கிளம்புவதால் பயணிகளுக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது.

இதன் காரணமாக வண்டி எண் 02661 "சென்னை எழும்பூர் - மதுரை - செங்கோட்டை" சிறப்பு ரயில் என்றும், வண்டி எண் 02662 "செங்கோட்டை - மதுரை - சென்னை எழும்பூர்" சிறப்பு ரயில் என்றும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. 

அதே போல், வண்டி எண் 06181 "சென்னை எழும்பூர் - காரைக்குடி - செங்கோட்டை" சிறப்பு ரயில் எனவும், வண்டி எண் 06182 "செங்கோட்டை - காரைக்குடி - சென்னை எழும்பூர்" சிறப்பு ரயில் எனவும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

வண்டி எண் 02661/02662 சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வண்டி எண் 06181/06182 சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில்சந்தை, கடையநல்லூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கொண்ட தகவல்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

சரி அதை ஏன் பொதிகை சிறப்பு ரயில் என்றோ, சிலம்பு சிறப்பு ரயில் என்றோ அழைக்கக்கூடாது !.

Renaming of Trains

1. Train No.06181Chennai Egmore - Sengottai Express is renamed as Chennai Egmore – Karaikkudi - Sengottai Express

2. Train No.06182 Sengottai – Chennai Egmore Express is renamed as Sengottai – Karaikkudi - Chennai Egmore Express

3. Train No.02661 Chennai Egmore – Sengottai Express is renamed as Chennai Egmore – Madurai – Sengottai Express

4. Train No.02662 Sengottai - Chennai Egmore Express is renamed as Sengottai – Madurai – Sengottai Express