சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு பொங்கல் ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் இடையே அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 13ம் தேதியும், கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 17ம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.

வண்டி எண் 06089 சென்னை சென்ட்ரல் ➡️ கோயம்புத்தூர் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து இரவு 11:30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு கோயம்புத்தூர் ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்கத்தில், வண்டி எண் 06090 கோயம்புத்தூர் ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4:30க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த ரயில் இரு மார்கத்திலும் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் சென்னை மார்க்கமாக பயணிக்கும் போது பெரம்பூர் ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயிலின் அட்டவணை 👇 

06089 சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் ⬇️⬇️ரயில் நிலையம்06090 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ⬆️⬆️
23:30சென்னை சென்ட்ரல்4:30
--பெரம்பூர்03.48/03.50
00.28/00.30அரக்கோணம்02.58/03.00
01.18/01.20காட்பாடி02.08/02.10
02.43/02.45ஜோலார்பேட்டை00.38/00.40
04.37/04.40சேலம்22.47/22.50
05.55/06.00ஈரோடு21.35/21.40
06.43/06.45திருப்பூர்20.43/20.45
8:00கோயம்புத்தூர்20:00

இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை(ஜன 10) காலை 8 மணிக்கு துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.