முன்பதிவு மையங்களில் வாங்கிய ரயில் பயணச் சீட்டுகளை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான கால வரம்பு நீட்டிப்பு


2020 மார்ச் 21ம் தேதி முதல் 2020ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரையிலான பயண காலத்தில், முன்பதிவு மையங்களில் வாங்கிய ரயில் பயணச் சீட்டுகளை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான கால வரம்பை, பயண தேதியிலிருந்து ஒன்பது மாதம் வரை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ரயில்வே துறையால் ரத்து செய்யப்பட்ட, கால அட்டவணைப் பட்டியலில் உள்ள வழக்கமான ரயில்களுக்கு மட்டும் இது பொருந்தும்.

ஒருவேளை பயணச் சீட்டு 139 என்ற எண் மூலமோ அல்லது ஐஆர்சிடிசி இணையதளம் மூலமோ ரத்து செய்யப்பட்டால், மேலே குறிப்பிட்ட பயண காலத்துக்கான டிக்கெட்டுகளை, முன்பதிவு மையங்களில் ஒப்படைப்பதற்கான காலவரம்பும், பயண தேதியிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.